20வயது இளம்பெண்ணின் உடம்பெல்லாம் காயம்... ஆடையெல்லாம் ரத்தக்கறை! ஓடும் காரில் சீரழித்து வீசிவிட்டு சென்ற கொடுமை

Report
1015Shares

தஞ்சையில் இளம்பெண் ஒருவரை கூட்டுபலாத்காரம் செய்து சாலையில் வீசிவிட்டு சென்றுள்ளது பயங்கர அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகே உள்ள சானூரப்பட்டி கடைவீதி அருகே துணியெல்லாம் ரத்தக்கறையுடன் கிழிந்த நிலையிலும், உடலில் காயத்துடனும், பெண் ஒருவர் சாலையில் விழுந்து கிடந்துள்ளார்.

மயக்கநிலையில் உயிருக்கு ஆபத்தான இருந்த அப்பெண் வடநாட்டைச் சேர்ந்தவராக தெரிந்துள்ளார். பின்பு அவரை மாதர் சங்கத்தினைச் சேர்ந்த நிர்வாகிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இந்தி தெரிந்தவரை வைத்து அப்பெண்ணிடம் விசாரித்த போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அவர் பெங்களூரில் தங்கியுள்ளதும், அங்கிருந்து தஞ்சையில் ஒரு வீட்டிற்கு வீட்டு வேலை செய்வதற்கு நபர் அழைத்துச் சென்றதாகவும், 5 மாதங்கள் அந்த வீட்டில் வேலை செய்ததாகவும் கூறியுள்ளார்.

ஆனால், அந்த வீட்டு உரிமையாளரும், அவரது மனைவியும் பெண்ணை ஏராளமான வழிகளில் துன்புறுத்தியும், கொடுமைப்படுத்தியும், பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளனர்.

நேற்று காரில் 4 பேர் அப்பெண்ணை ஏற்றிக்கொண்டு வழியெல்லாம் அடித்து உதைத்ததோடு, செங்கிப்பட்டி அருகே பூதலூர் பிரிவு சாலை அருகே ஓடும் காரில் இருந்தே பெண்ணை வீசி விட்டு சென்றனர்" என்று தெரியவந்துள்ளது.

வயிற்றை பிடித்து கொண்டே அழுதவாறே இந்த தகவல்களை பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அந்த பெண்ணை தாக்கியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மாதர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர் என்றும் அந்த பெண் தங்கி இருந்த வீட்டின் ஓனர் யார் என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என்றும் மாதர் சங்கத்தினர் வலுவான வேண்டுகோளை வைத்து வருகின்றனர்.

அந்த வீட்டில் இருந்த அத்தனை பேருமே அடித்து கட்டாயப்படுத்தி தான் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்று செங்கிப்பட்டி பொலிசாரிடம் புகாரும் அளித்துள்ளனர். இதையடுத்து, அந்த புகாரின்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

அதேபோல, ரத்த காயங்களுடன் காரில் இருந்து இளம்பெண் தூக்கி வீசப்பட்டதும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியும் உள்ளது. மேலும் பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதால் விரைவில் குற்றவாளிகளை பிடித்துவிடுவதாக பொலிசார் கூறி வருகின்றனர்.

loading...