மனைவியை உயிருடன் மண்ணுக்குள் புதைத்த கணவர்... 7 வயது மகள் முன்பு அரங்கேறிய அவலம்!

Report
894Shares

ஆந்திராவில் குடிபோதையில் தனது 7 வயது மகள் முன்பு தாயை உயிருடன் புதைத்த கணவரைப் பொலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் கோட்லபாலம் கிராமத்தைச் சேர்ந்த சுபாஷினி (37). இவரது 3வது கணவர் புதாபுக்கல சுவாமுலு (30).

கணவர் மற்றும் மனைவி இருவருக்கும் குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த மே மாதம் 27ம் திகதி இரவு இருவரும் போதையில் இருந்துள்ளனர். அப்போது வாய்த்தகராறு ஏற்பட்டு இறுதியில் கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த சுவாமுலு தன் மனைவியை அடித்ததில் அவர் மயக்கமடைந்துள்ளார். மயக்கத்தில் இருந்த அவரை கணவர் சுவாமுலு இரவோடு இரவாக குழி தோண்டி உயிருடன் நிலத்தில் புதைத்துள்ளார்.

இதைப் பார்த்த சுபாஷினியின் 7 வயது மகள் தனது தந்தை, தாயை உயிருடன் இருக்கும் போதே குழிதோண்டி புதைத்துவிட்டார் என்று பொலிசாருக்கு தகவலளித்துள்ளார்.

பொலிசார் தற்போது சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதுடன், தலைமறைவாகிய சுவாமுலு மீது வழக்கு பதிவு செய்து தேடியும் வருகின்றனர்.

loading...