பல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..!

Report
1169Shares

குடும்பத்திற்காக 38 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைபார்த்து சொத்து சேர்த்த நபர் குடும்பத்தினரால் வீட்டை விட்டு முதியவரை வெளியே துரத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் நாகராஜன். இவருக்கு குமரி என்ற மனைவியும், இரண்டு மகன்கள், இரண்டு மகள்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர்.

மகள்களுக்கு திருமணம் முடிந்துவிட்டது. இந்நிலையில் கடந்த 38 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலைபார்த்துவந்த நாகராஜன் தான் சம்பாதித்த பணம் மூலம் சொந்த ஊரில் மாடி வீடு, வணிக வளாகம் உட்பட 2 கோடிக்கு சொத்து சேர்த்துவைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முதுமை காரணமாக வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்த நாகராஜனிடம் அவரது சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி எழுதி தருமாறு அவரது மனைவியும், குடும்பத்தினரும் வற்புறுத்தியுள்ளனர். அதற்கு நாகராஜன் மறுப்பு தெரிவிக்க குடும்பத்தினர் அவரை வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர்.

இதனால், மனமுடைந்து கையில் தனது பைகளை எடுத்துக்கொண்டு நாகராஜன் பிச்சை எடுப்பவர் போல் ரோட்டில் அலைந்துவருகிறார். ஆனால் நாகராஜை தாங்கள் வீட்டை விட்டு வெளிய அனுப்பவில்லை என அவரது குடும்பத்தினர் கூறிவருகின்றனர்.

loading...