நடுவானில் சென்றபோது விமானிக்கு கொரோனா... மீண்டும் திரும்பிய அதிர்ச்சி சம்பவம்..!

Report
648Shares

ரஷ்யாவில் உள்ள இந்தியர்களை மீட்பதற்காக மாஸ்கோ சென்ற விமானத்தின், விமானிக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் பாதியிலேயே விமானம் மீண்டும் இந்தியா விவகாரம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்வதேச விமான சேவைகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வந்தே பாரத் மிஷன் சார்பில் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்தும் வரும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு அங்கமாக ரஷ்யாவில் சிக்கியிருப்பவர்களை அழைத்து வருவதற்காக டெல்லியில் இருந்து ஏர் இந்தியாவின் சிறப்பு விமானம் இன்று காலை 7 மணிக்கு டெல்லியில் இருந்து மாஸ்கோவிற்கு புறப்பட்டு சென்றது.

ஆனால் அதில் சென்ற விமானி ஒருவருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து உஸ்பெகிஸ்தான் வரை சென்ற விமானம் மீண்டும் இந்தியாவுக்கே வர உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து சம்மந்தப்பட்ட விமானியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த விமானக் குழுவினரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் மாஸ்கோவில் இருக்கும் இந்தியர்களை மீட்க வேறு விமானம் அனுப்பப்படும் என சொல்லப்படுகிறது.

loading...