நான் தானே உன் புருஷன்... அந்த மாதிரியான படங்களை அனுப்பு! காசியின் லீலைகளை அம்பலப்படுத்திய இளம்பெண்

Report
1120Shares

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், ஆறு நாட்கள் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ள காசியிடம், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அப்போது அவன், "ஏராளமான பெண்கள் என்னிடம் தாராளமாக பழகினார்கள். நானாகச் சென்று எந்தப் பெண்ணையும் ஏமாற்றவில்லை. யாரையும் திருமணம் செய்தேனா?

இந்தக் காசி யாரென்று, என் மீது புகார் அளித்த பெண்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்'' என்று கூறியதாக நாளிதழ்களில் செய்தி வெளிவர, நக்கீரனை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் சில தகவல்களை அளித்துள்ளார்.

அச்செய்தி பின்வருமாறு,

நாகர்கோவிலைச் சேர்ந்த காசி (alias) சுஜி, 26 வயது ஆண், ‘அன்பே சிவம்’ என்ற போர்வையில் ‘Who is perfect, where is perfect = Suji’ எனக் கூறிக்கொள்வான்.

சமூக வலைத்தளத்தில் (Facebook, Instagram, Tiktok, Dating application) தனது பெயரில் கணக்குகளைத் தொடங்குவான்.

"நான் அவன் இல்லை'’ பாணியில் ஒவ்வொருவரிடமும் தன்னை ஒரு தொழிலதிபர், Pilot, Engineer, Lawyer, ஆழ்கடல் மூழ்காளர், Gym Trainer, Suguna Chicken Dealer என்று அறிமுகப் படுத்திகொள்வான்.

பெண்களை, வயது வாரியாக, குடும்ப சூழ்நிலை, பணம், அப்பாவித்தனம், தொழில், திருமணம் ஆகாதவர்கள், திருமணம் ஆனவர்கள் என வகைப்படுத்துவான். மேலும், காதலில் தோல்வியுற்ற பெண்கள், மனதளவில் தனிமையில் இருப்பதாகக் கவலையில் உள்ள பெண்கள் என்றால், வளைப்பது இவனுக்கு மிகவும் சுலபம்.

அவர்களது நம்பிக்கையைப் பெற என்ன பேசினால் அந்தப் பெண்ணிற்கு பிடிக்குமோ, அதற்கு ஏற்றாற்போல பேசி, மனதில் இடம் பிடிப்பான்.

உடல் நலம், மன நலம், பாதுகாப்பு என அக்கறை செலுத்தி, உரிமை எடுத்துக் கொள்வான். சில மாதங்கள் நட்பாகப் பேசும் அவன், ஒரு நாள் அந்தப் பெண்ணிடம் "நான் உங்களைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகிறேன். உங்களுக்கு சம்மதம் என்றால் உங்கள் வீட்டில் பெண் கேட்கிறேன். உங்கள் பெற்றோர் தொலைபேசி எண் கொடுங்கள்'' என்பான்.

மேலும், "உங்களுடைய கடந்த காலம் எனக்குத் தேவையில்லை. கடந்த காலம் பற்றி யோசித்து ஒன்றும் நடக்கப்போவதில்லை. இப்பொழுது எப்படி வாழ்கிறோம்? இனிமேல் எப்படி வாழப்போகிறோம்? என்பதுதான் முக்கியம்''’ என்பான்.

காதலிக்க ஆரம்பித்து பின் ஒரு நாள் இரவு நேரத்தில் video call செய்து நிர்வாணமாகப் பார்க்க வேண்டும் என்றான்.

நான் மறுத்ததற்கு, "நான்தானே உன் புருஷன்? உனக்கும் எனக்கும் மனதளவில் திருமணம் ஆகிவிட்டது என்றல்லவா நினைத்தேன்? என்னை நம்ப மாட்டாயா?'' என்று கேட்டான்.

என்னைக் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவன்தானே என இவனை நம்பி video call செய்தேன். இந்தக் கொடூரன் அனைத்தையும் Record செய்துவிட்டான்.

இவனைப் பற்றி தெரிந்து நான் விலக ஆரம்பித்தவுடன் "என்னுடன் வந்து உல்லாசமாக இரு.. இல்லையென்றால் சமூகவலைத்தளங்களில் உன் ஆபாச புகைப்படங்களை upload செய்து நீ ஒரு விபச்சாரி என்று கூறுவேன்'' என்றான்.

இவன் மிரட்டலுக்கு என்னை அடிமையாக்கி பல தடவை உல்லாசமாக இருந்தான். ஒரு கட்டத்தில் இவனை block செய்துவிட என் பெற்றோருக்கு அந்த ஆபாச புகைப்படங்களை அனுப்பி விடுவேன் என்று மிரட்டினான்.

நான் மனம் உடைந்து தற்கொலை நிலைக்கு தள்ளப்பட்டேன்.’ ஒரு சொட்டுக் கண்ணீர்கூட உன் கண்களில் இருந்து வரக் கூடாது என்று கூறியவன், என் வாழ்க்கையைச் சீரழித்து தினமும் கண்ணீர் விட வைத்து விட்டான்... என்று எழுதியுள்ளார் கண்ணீருடன்.

loading...