பயிர்களை நாசம் செய்த வெட்டுக்கிளிகளை.. பிரியாணி செய்து விற்பனையை தொடங்கிய உணவகங்கள்..!

Report
1419Shares

கடந்த சில நாட்களாக கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையென திரண்டு வந்து விவசாய பயிர்களை அழித்து வரும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வெட்டுக்கிளிகளை ஒழிக்கும் முயற்சிகளை அரசுகள் முன்னெடுத்துள்ளது. விவசாய பயிர்களுக்கு பெரும் சவாலாகவும் எதிர்காலத்தில் நாட்டில் உணவுப் பஞ்சத்தையும் ஏற்படுத்திவிடும் என வெட்டுக்கிளிகள் குறித்து ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் தார், ஜெய்ப்பூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, கிரேவி, லோகஸ்ட் 65 உள்ளிட்ட உணவு வகைகளைத் தயார் செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

மேலும், வெட்டுக்கிளியைச் சமைப்பதற்கு முன் நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாக அதன், கால், இறக்கைகளை நீக்கிவிட வேண்டும் என்றும் கூறுகின்றனர்.

அதிக புரதசத்து மிக்க வெட்டுக்கிளி உணவுகளை விரும்பும் ராஜஸ்தான் பகுதி மக்கள் அதன் சுவை மிகவும் ருசியாக இருப்பதாக கூறுகின்றனர்.

loading...