மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்த குழந்தை.. அழுகைச் சத்தத்தைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர்! நெஞ்சை பதற செய்யும் கொடூரம்

Report
491Shares

உத்திரப்பிரதேச மாநிலம் சோனாரா கிராமத்தில் கட்டிடப்பணி நடக்கும் இடத்தில் ஆண் குழந்தை ஒன்று உயிருடன் மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டம் சோனோரா கிராமத்தில் வழக்கம் போல் கட்டிட பணி நடைபெற்றுவந்தது. இந்நிலையில் தீடீரென கட்டிடத்தின் ஒரு பகுதியில் இருந்து குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. இதை உணர்ந்த அங்கிருந்த தொழிலாளிகள் அழுகுரல் வந்த திசையை நோக்கி மக்கள் தேட ஆரம்பித்தனர்.

அப்போது அங்கிருந்த மணல் குவியலின் மேல் பகுதியில் ஒரு கைக்குழந்தையின் கால் தெரிந்துள்ளது. பதறிய அங்கிருந்த தொழிலாளிகள் அந்த இடத்தில் தோண்டி பார்த்த போது ஆண் குழந்தை ஒன்று உயிருடன் புதைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

உடனடியாக குழந்தையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மண்ணிற்குள் புதைக்கப்பட்டிருந்ததால் குழந்தை மணலை விழுங்கியிருப்பதாகவும், அதனால் மூச்சுக்குழலில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது தீவிர சிகிச்சைக்கு பின் குழந்தையின் உடல்நிலை சீராகியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் குழந்தையை மீட்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்புதான் புதைக்கப்பட்டுள்ளதால் குற்றவாளி தப்பித்திருக்க வாய்ப்பில்லை எனவும், குழந்தையை உயிருடன் புதைத்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் பணி தீவிரமடைந்துள்ளதாகவும், குற்றம் நிரூபிக்கப்பட்டும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் ஆள் நடமாட்டம் இருந்த பகுதியில் கைக்குழந்தை குழி தோண்டி புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களை மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

loading...