5 வருடமாக காதலித்த இளைஞர்... வாட்ஸ்அப் மூலம் காதலிக்கு வந்த புகைப்படங்கள்! பின்பு நிகழ்ந்த சோகம்

Report
1569Shares

சிங்கப்பூரில் இருந்த காதலன் தன்னை ஏமாற்றி வேறு கல்யாணம் செய்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுக்கா, பாப்பாநாடு அருகே உள்ள சோழகன்காடு கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் அர்ச்சுனனின் மகன் புகழரசன்.

சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய புகழரசனும் அதே ஊரை சேர்ந்த மேலத்தெரு செல்வம் என்பவரது மகளும் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்த அருணா என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இது நாளடைவில் காதலாக மாறியுள்ள நிலையில் புகழரசன் சிங்கப்பூர் சென்றுள்ளார். அங்கு சென்றும் போன் மூலம் பேசி காதலித்து வந்துள்ளனர்.

இதனிடையே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு புகழரசனுக்கு, ஆம்பலாப்பட்டுவைச் சேர்ந்த சாந்தி என்கிற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த அருணா, புகழரசன் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாகவும், தன்னை தன் காதலனோடு சேர்த்து வைக்கும்படியும் கூறியும் தர்ணா போராட்டத்தை நடத்தியதில், பின்பு பொலிசாரால் சமாதானப்படுத்தப்பட்டு அவரது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிங்கப்பூரிலிருந்து சொந்த ஊருக்கு வந்த புகழரசன் தான் நிச்சயம் செய்த பெண்ணுடன் திருமணம் செய்து அந்த புகைப்படத்தினை அருணாவின் வாட்ஸ்அப்பிற்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதனை அவதானித்த அருணா ஏமாற்றம் தாங்கிக்கொள்ள முடியாமல் குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

பின்னர், தற்கொலை செய்துகொண்ட அருணாவை அவரது பெற்றோர்கள் தூக்கி சென்று புகழரசன் வீட்டுவாசலில் வைத்து, புகழரசனின் வீட்டையும் அடித்து நொறுக்கி , புகழ் அரசனையும் அடித்ததாகக் கூறப்படுகிறது.

பின்பு பொலிசார் வந்த புகழரசனையும், சாந்தியையும் கைது செய்துள்ளனர். அருணாவின் சடலத்தினை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அங்கு வேறு ஏதும் கலவரங்கள் உண்டாகிவிடக் கூடாது என்பதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொலிசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

புகழரசனின் வீட்டுக்கு தன் மகளின் சடலத்துடன் சென்ற அருணாவின் அம்மா, “நல்லா வாழ வேண்டிய என் பொண்ணை காதல் என்கிற பெயரில் ஏமாத்தினது மட்டுமில்லாம, இந்த வீட்டுக்கு மருமகளாக வர ஆசைப்பட்டு காத்திருந்த என் பொண்ணை இப்படி பிணமாக வர வெச்சுட்டீங்களே” என்று கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.


loading...