2 மாத குழந்தையை கணவரிடம் விட்டுச் சென்ற தாய்... திரும்பிய போது கணவர் செய்த கேடுகெட்ட செயல்!

Report
866Shares

ஈரோடு மாவட்டத்தில் பிறந்து 2 மாதங்களே ஆன பெண் குழந்தையை அதன் தந்தையே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்தவர் துளசிமாதன். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் 2 மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி ஒரு பெண் குழந்தையும் பெற்றெடுத்துள்ளார்.

குழந்தை பிறந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாகிய நிலையில், தாய் தனது கணவரிடம் கொடுத்துவிட்டு மகளிர் குழுவிற்கு பணம் செலுத்த சென்றுள்ளார்.

அவரது மனைவி குழுவிற்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது பச்சிளம் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொண்டிருந்திருக்கிறார் துளசிமாதன்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக குழந்தையை அவரிடமிருந்து பறித்துக் கோண்டு காவல் நிலையத்திற்கு ஓடியுள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து துளசிமாதனிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர் உண்மையை ஒப்புக்கொள்ளவே அவர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

loading...