வேறொரு பெண்ணுடன் தனிமையில் கணவர்... கையும், களவுமாக பிடித்த மனைவி! ஆவேசத்தில் நிகழ்ந்த அடிதடி

Report
1597Shares

தெலுங்கானாவில் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த கணவரை, மனைவி அடித்து உதைத்துள்ள காணொளி தீயாய் பரவி வருகின்றது.

தெலுங்கானா வாரங்கல் அருகே போத்தனகரில் வசிக்கும் தாசில்தார் அலுவலகத்தில் வேலை செய்பவர் துளசி. இவரது கணவர் சீனிவாஸ். வேலைக்கு செல்லாத இவர் மனைவியின் சம்பளத்தில் செலவு செய்து வந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருவதை அறிந்த துளசி தனது உறவினர்களுடன் அங்கே சென்றுள்ளார்.

வீட்டின் கதவை ஆவேசமாக தட்டிய துளசி, கணவரையும் அவருடன் இருந்த பெண்ணையும் அடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். இக்காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

loading...