தூங்கி கொண்டிருந்த மகளை கொலை செய்த தந்தை.. ஏன் செய்தார் என தெரியாமல் குழம்பிபோன காவல்துறையினர்..!

Report
1185Shares

மகாராஷ்டிரா மாநிலத்தில் வீரார் பகுதியை சேர்ந்தவர் தத்தாராம் சமரம் ஜோஷி. இவர் கடந்த நாட்களுக்குமுன் வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது 20 வயது மகளான ஆகான்ஷாவை சுத்தியல் எடுத்து கொடூரமாக தலையில் தாக்கி கொலை செய்துள்ளார்.

இந்த கொடூர செயலால் அவரது மகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். தந்தையின் இந்த கொடூர தாக்குதலில் அந்த பெண்ணின் மண்டை ஓடு மோசமான முறையில் நொறுங்கி போயுள்ளதாக மருத்துவ தகவல் தெரிவிக்கின்றது.

ஜோஷி தனது மனைவி, ஒரு மகன் மற்றும் மகளுடன் வாழ்ந்து வந்தார். அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த நிலையில் இந்த கொடூர கொலை அரேங்கேறியுள்ளது.

மேலும், தனது மகளை கொலை செய்ததற்கான காரணம் குறித்து ஜோஷி போலீசாரிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆகான்ஷாவின் தாய் மற்றும் மூத்த சகோதரர் ஆகியோர் இந்த கொலையின் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர்.

அவர்களிடம் இதுகுறித்து பின்னர் விசாரிக்கப்படும். அதே நேரத்தில், ஜோஷி, 'என் மகளை நானே கொலை செய்து விட்டேன்' என திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து அறிய வேண்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருந்த மகளை அந்த பெண்ணின் தந்தையே, சுத்தியல் மூலம் கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

loading...