பாழடைந்த கிணற்றில் தோண்ட தோண்ட சடலங்கள்: பகீர் கிளப்பிய உண்மை சம்பவம்

Report
1156Shares

தெலுங்கானாவில் வடமாநில தொழிலாளர்கள் உட்பட 9 பேர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாரங்கல் மாவட்டத்தின் கோர்ரே குந்தா என்ற கிராமத்தில் சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கோணிப்பை தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.

மேற்குவங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனர்.

அவர்களில் ஒருவர்தான் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மசூத், இவர் தன்னுடைய குடும்பத்தினருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் வாடகை கொடுக்க முடியாமல் சந்தோஷின் குடோனில் குடியேறியுள்ளார்.

இந்த நிலையில், குடோனில் வசித்து வந்த மசூத், குடும்பத்துடன் காணாமல் போனதாக அதன் உரிமையாளர் சந்தோஷ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

இதனடிப்படையில் பொலிசார் விசாரணை நடத்திய போது, பாழடைந்த கிணற்றில் சடலங்கள் கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனைதொடர்ந்து மீட்புபடையினர் சடலங்களை மீட்டனர், அது மசூத், அவரது மனைவி மற்றும் மகன், மகள் என தெரியவந்தது.

வருமானம் ஏதும் இல்லாததால் குடும்பத்துடன் சேர்ந்து தற்கொலை செய்திருக்கலாம் என எண்ணிய நிலையில் மேலும் 5 சடலங்கள் மீட்கப்பட்டது.

அவை, மசூத்தின் மகன்கள் சோகில், சபாத் மற்றும் திரிபுராவைச் சேர்ந்த ஷக்கில் அகமது, பீகாரைச் சேர்ந்த ஸ்ரீராம், சியாம் ஆகியோரது உடல் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தற்கொலை என்பது தவறான கோணம் என்று பொலிசார் விசாரணையின் போக்கை மாற்றினர், மோப்ப நாயை அழைத்து வந்த பொலிசார் இறந்தவர்கள் வாழ்ந்த குடியிருப்பு அருகில் சென்று நின்றது.

விசாரணையில், 2 நாட்கள் முன்பு வாரங்கல் நகரத்திற்குச் சென்று வீட்டுக்கு தேவையான பொருட்களை பெருமளவு வாங்கிவந்ததை பொலிசார் கண்டுபிடித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு பிறந்தநாள் கொண்டாடியதில், இவர்களுள் மோதல் ஏற்பட்டதாக வேலைபார்த்த நிறுவனத்தின் உரிமையாளர் பொலிசாரிடம் கூறியுள்ளார்.

இந்த வழக்கில் திடீர் திருப்பமாக, இவர்களுடன் பணியாற்றி வந்த இரண்டு இளைஞர்கள் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்து விசாரித்தால் மட்டுமே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

loading...