பாத்ரூம் போக பைக்கை நிறுத்த சொன்ன மனைவி... திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி!... நொடியில் நடந்த சோகம்

Report
1721Shares

கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கெம்பண்ணா. இவரது மனைவி பூர்ணிமா மற்றும் 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.

விவசாயம் செய்து வந்த கெம்பண்ணா, நிலத்தினைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்த நிலையில் சிறிது நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனால் பொருளாதார சிக்கல் ஏற்பட்ட நிலையில், கணவன், மனைவி இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. பின்பு பூர்ணிமா கணவரை விட்டு தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

பின்பு மனைவியை சமாதானப்படுத்தி தனது ஊருக்கு குழந்தையையும் சேர்த்து அழைத்து வந்த நிலையில், இடையே பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியதால் இருசக்கர வாகனத்தினை ஓரமாக நிறுத்திவிட்டு, அதில் குழந்தையை அமர வைத்துவிட்டு மனைவிக்கு துணையாக அவரும் சென்றுள்ளார்.

அப்பொழுது குழந்தை தனியாக இருப்பதை அவதானித்த அங்கிருந்தவர்களிடம், சற்று தூரத்தில் நின்ற கெம்பண்ணா என்னுடைய குழந்தை தான் என்று கூறியுள்ளார்.

அவ்வாறு கூறிவிட்டு மனைவியிடம் திரும்பியவருக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆம் அங்கு ஓடிக்கொண்டிருந்த கபினி ஆற்றுக்குச் சென்ற பூர்ணிமா, கண்ணிமைக்கும் நேரத்தில் ஆற்றில் குதித்து விட்டார்.

உடனடியாக தனது மனைவியைக் காப்பாற்றும் நோக்கில், கெம்பண்ணா ஓடிப் போய் ஆற்றில் குதித்து, ஆற்றில் மூழ்கி பலியானார்கள். இதைக் கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குத் தீயணைப்புத் துறையினருடன் விரைந்து வந்த அவர்கள், கெம்பண்ணா மற்றும் பூர்ணிமாவின் உடல்களை மீட்டுள்ளனர்.

கணவன் மனைவிக்குள் இருந்த பிரச்சனையில், நொடிப்பொழுதில் அவசரப்பட்டு மனைவி எடுத்த முடிவினால் இன்று அந்த குழந்தை அனாதையாகியுள்ளது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

loading...