2020-ல் இறுதியில் ஏற்படும் ஆபத்து.. கொரோனாவை விட பயங்கரமா இருக்குமா?.. ஜோதிடர் அபிக்யா கணிப்பு!

Report
4098Shares

கொரோனா வைரஸ் குறித்து முன்கூட்டியே கணித்த குட்டி ஜோதிடரான அபிக்யா தற்போது டிசம்பர் மாதத்தில் மற்றொரு பேரழிவு வரும் என்று புதிய காணொளியினை வெளியிட்டுள்ளார்.

தற்போது கொரோனா வைரஸின் கோரத்தினால் உலக அளவில் 14 லட்சம் பேர் பாதிக்கப்பட்டும், 83 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் உயிரிழக்கவும் செய்துள்ளனர்.

இந்த கொரோனா வைரஸ் குறித்து, கடந்த 2019ம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் கணித்துள்ளார் கர்நாடகாவைச் சேர்ந்த குட்டி ஜோதிடர் அபிக்யா ஆனந்த். இந்த நிலை மே மாதம் 29ல் கட்டுக்குள் வரும் என்று கூறி காணொளி வெளியிட்டிருந்தார்.

தற்போது தனது யூரியூப் பக்கத்தில் மற்றொரு காணொளியினைப் பதிவிட்டுள்ளார். இதில், இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உலகிற்கு ஒரு பேரழிவு வரும். அது அடுத்த ஆண்டு மார்ச் 31ம் திகதி வரை நீடிக்கும்.

அது கொரோனாவை விட கொடியதாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொண்டால் மட்டுமே இதுபோன்ற புதிய நோய்த்தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.

விலங்குகளை கொல்வதை நாம் நிறுத்த வேண்டும். இயற்கைக்கு எதிராக நாம் செய்யும் பல காரியங்களை நிறுத்த வேண்டும் என்று அக்காட்சியில் கூறியுள்ளார்.