நாடகமாடிய மனைவி... பொலிசாரால் அவிழ்ந்த உண்மை! மனமுடைந்து கணவர் தற்கொலை

Report
986Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் தூத்துக்குடியில், கடந்த 3ம் திகதி ஊரடங்கினைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த 100 பவுன் நகை, மற்றும் பணத்தை கொள்ளையடித்தது மனைவி என்பது தெரியவந்துள்ளது.

தூத்துக்குடி தாளமுத்து நகர் அருகே உள்ள பெரியசெல்வம் நகரில் வசித்து வரும் துறைமுக ஊழியர் வின்சென்ட். மனைவி ஜான்சி மற்றும் குடும்பத்தினருடன் அப்பகுதியில் வசித்துள்ளனர்.

கடந்த 3ம் திகதி இவர்களது பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கணவர் பொலிசில் புகார் அளித்துள்ளார்.

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிசார், வின்சென்ட்டின் மனைவி ஜான்சி தான் அந்த நகைகளை கொள்ளையடித்து நாடகமாடியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

மேலும் தான் நகையை திருடியதாக வின்சென்ட்டின் மனைவி ஜான்சி ஒப்புக்கொண்ட பின்பு பொலிசார் கைது செய்துள்ளனர். ஆனால் கைது செய்யப்பட்ட அன்றே ஜான்சி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் இதனால் மனமுடைந்த வின்சென்ட் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது கொலை செய்யப்பட்டாரா குறித்து தாளமுத்து நகர் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

loading...