இலங்கைக்கு சென்று வந்த பிரபலத்தின் மகளை அறிகுறியே இல்லாமல் தாக்கிய கொரோனா!

Report
1766Shares

இலங்கைக்கு சென்று வந்த பிரபல தயாரிப்பாளர் கரீம் மொரானின் மகளுக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கரீம் மோரானிக்கு ஷாஜா, சோயா என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

அவர்கள் இருவருமே அண்மையில் வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பியுள்ளனர். இதில் ஷாஜா இலங்கைக்கு சென்று வந்து உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பியதால் இருவருக்குமே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் ஷாஜாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து தயாரிப்பாளர் கரீம் மொரானி கூறுகையில்,

எந்த அறிகுறியும் இல்லாமல் ஷாஜாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஷாஜா கடந்த மாதம் முதல் வாரம் இலங்கையில் இருந்து வந்து விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் ஷாஜியா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கரீம் மொரானி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கரீம் மொரானி குடும்பத்தில் உள்ள அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

loading...