தங்கையை நம்பி சென்ற அக்கா... தலையணையால் அமுக்கி கொன்ற 17 வயது தங்கை!

Report
858Shares

தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த அக்காவை காதலனுடன் சேர்ந்து பள்ளி மாணவி ஒருவர் கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் நகராட்சி கொசவம்பட்டி பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி. இவரும், இவரது மனைவியும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு கல்லுரி படிக்கும் மோனிஷா(19) என்ற மகளும், பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயதில் மற்றொரு மகளும் இருந்துள்ளனர்.

ஊரடங்கினால் மகள்கள் இருவரும் வீட்டில் பெற்றோர்கள் பக்கத்தில் கூலி வேலைக்கு சென்றுள்ளனர். இத்தருணத்தில் மோனிஷாவின் தங்கை அலறியுள்ளார். இவரது சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர், வந்து பார்த்த போது மோனிஷா மூக்கில் ரத்தம் வடிந்தும் கை அறுக்கப்பட்டும், இரண்டாவது மகள் கைகள் அறுபட்டும் கிடந்துள்ளார்.

அக்கம்பக்கத்தினரிடம், அக்காவிற்கும் தனக்கும் சண்டை ஏற்பட்டதால் அவள் தனது கையைக் கிழித்துவிட்டாள் என்றும் நான் அவரது கையை கிழித்துவிட்டேன் என்று கூறியள்ளார். இரண்டு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் அக்கம்பக்கத்தினர். அங்கு மோனிஷாவை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பின்பு பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதே ஊரைச் சேர்ந்த ராகுல்(19) என்ற இளைஞர், மோனிஷாவுடன் கல்லூரியில் படித்துவந்த நிலையில், இருவரும் ஒரே பேருந்திலும் சென்று வந்துள்ளனர். அப்பொழுது மோனிஷாவை காதலிப்பதாக, ராகுல் கூறியுள்ளார்.

அதற்கு மோனிஷா ராகுலின் பழக்கவழக்கம் சரியில்லாததால் காதலிக்க மறுத்துள்ள நிலையில், மோனிஷாவின் தங்கையிடம் தனது காதலுக்கு ராகுல் உதவிகேட்டுள்ளார். தங்கை கூறியும் மோனிஷா கேட்காமல் இருந்துள்ளார்.

இந்நிலையில் ராகுலுக்கும், மோனிஷாவின் தங்கைக்கும் காதல் ஏற்பட, இவர்களது காதலைக் கண்டித்துள்ளார் மோனிஷா. இதனால் காதலனுடன் சேர்ந்து அக்காவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

சம்பவத்தன்று ராகுல் தனது வீட்டிற்கு வரவே, மோனிஷா எதற்காக வந்திருக்கிறாய்? என்று கேட்டுள்ளார். அதற்கு ராகுல் உன்னை கொலை செய்யவே வந்திருக்கிறான் என்று தங்கை கூறியுள்ளார். ஆனால் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தங்கையிடம் அவனை வெளியே அனுப்பிவிடு என்று கூறிவிட்டு, சென்றுள்ளார்.

ஆனால் இருக்கும் பொழுதே தங்கை தலையணையால் முகத்தை அமுக்கியும், ராகுல் மோனிஷாவின் காலை பிடித்தும் கொலை செய்துள்ளனர்.

மோனிஷாவின் மூக்கில் ரத்தம் வந்ததை அவதானித்து எஸ்கேப் ஆகியுள்ளார் ராகுல். ஆனால் சிறுமியோ அதனை சமாளிப்பதற்கு, அக்காவின் கையையும், தனது கையையும் கிழித்துக்கொண்டு இவ்வாறு நாடகமாடியது அம்பலமாகியுள்ளது.

பிரேதபரிசோதனைக்கு பின்பு பெற்றோர்களிடம் மோனிஷாவின் உடல் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தனது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தங்கையே காதலனுடன் சேர்ந்து அக்காவை கொலை செய்துள்ளது அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

loading...