டெல்லி கூட்டத்தில் கலந்துகொண்டவர் கொரோனா பரிசோதனைக்கு மறுப்பு

Report
330Shares

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவிரமாக பரவிவரும் நிலையில் மக்கள் அதிகமாக பாதுகாப்புடன் இருந்து வருகின்றனர். மேலும் அரசு பல வழிகளில் விழிப்புணர்வினை மக்களுக்கு ஏற்படுத்தி வருகின்றது.

நேற்றைய தினத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இத்தனை நாள் இல்லாத அளவிற்கு அதிகரித்தது. இதற்கு டெல்லி தப்லீக் ஜமாத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மூலம் தற்போது பரவி வருகின்றது என்று கூறப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கூட்டத்திற்கு சென்று வந்தவர்களை அடையாளம் கண்டு சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு டெல்லி கூட்டத்திற்கு சென்று வந்தவரை, அக்கம் பக்கத்தினர் மூலம் சுகாதார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார துறையினர் பரிசோதனைக்கு வந்த தருணத்தில் டெல்லி கூட்டத்திற்கு சென்று வந்த நபர், சோதனைக்கு ஒத்துழைக்காமல், பயங்கர கோபத்தில் பேசியுள்ளார். முதலில் மோடி, எடப்பாடி இவர்களை சோதனை செய்யுங்கள் என்று அவர் கூறிய காட்சி தற்போது தீயாய் பரவி வருகின்றது.

பரிசோதனைக்கு ஒத்துழைக்காமல் இவ்வாறு அதிகாரிகளை பேசுவது சற்று சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளதுடன், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

loading...