முதலாளியால் கைவிடப்பட்ட குடும்பங்கள்! பசியுடன் சாலையில் நடந்து சென்ற குழந்தைகள்.... காண்போரை கலங்க வைத்த காட்சி

Report
698Shares

ஊரடங்கு உத்தரவின் எதிரொலியால் டெல்லியில் வேலை பார்த்து வந்த பெரும்பாலான வடமாநில நபர்கள் டெல்லியை விட்டு காலிசெய்து தங்களது ஊர்களுக்கு செல்கின்றனர்.

சமீபத்தில் டெல்லியில் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்வதற்கு, பேருந்துநிலையத்தில் அலைமோதிக்கொண்டிருந்தனர். சிலர் தங்களை தங்களது ஊருக்கு அனுப்பவேண்டிய கோரிக்கை வைத்து, அவர்களுக்கு சில பேருந்துகள் இயக்கப்பட்டு அழைத்து செல்லப்பட்டனர்.

மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, வெயில், பசி என்பதைக் கூட பொருட்படுத்திக்கொள்ளாமல் பல ஆயிரம் மைல்கள் நடந்துசெல்ல முடிவு செய்து அவ்வாறு நடந்தும் சென்று கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் இவ்வாறான முடிவுகளை எடுப்பதற்கு காரணம், தாங்கள் வேலை பார்த்து வந்த நிறுவனத்தின் முதலாளிகள் கைவிடப்பட்டதால், டெல்லியில் பசி, பட்டினியுடன் கிடப்பதைவிட தங்களது ஊர்களுக்கு செல்லலாம் என்பதே காரணம்.

இந்நிலையில் வடமாநிலத்தினைச் சேர்ந்த பெண் ஒருவர் தங்களது குழந்தைகளை வெயில், பசி என்று பாராமல் தங்களது ஊருக்கு நடந்து அழைத்துச் செல்லும் காட்சி காண்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது.

செல்லும் வழியில் அந்த குழந்தைகளுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்துள்ளனர். இதில் சிறுமிக்கு உணவு அளித்த போது தம்பிக்கும் உணவு வேண்டும் என்கிறாள் அந்த சிறுமி. அதன்பின்னர் சிறுவனுக்கு தன்னார்வலர்கள் உணவு அளித்தனர். அவன் மற்றொரு குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு நடந்து செல்லும் தன் அம்மாவை உணவு தருவதாக அழைக்கிறான். இப்படியாக முடியும் அந்த வீடியோ காண்போரின் கண்களை குளமாக்கி வருகிறது.

மற்றொரு தம்பதியர் தமது நான்கு குழந்தைகளுடன் டெல்லியில் இருந்து பல மைல் தொலைவில் உள்ள சொந்த கிராமத்துக்கு நடக்கிறார். வழியில் பார்த்த ஒருவர் உணவு வேண்டுமா? என்று கேட்க, பிஸ்கட் இருக்கிறது போதும் என்றிருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாக எதற்கும் ஆசைப்படாத இவர்கள் விரைவில் ஊர் சென்றடைய வேண்டும் என்பதை மக்களின் விருப்பம்.

loading...