வாங்கிய கடனை முழுவதும் திருப்பி தருகிறேன்.. அதற்கு விஜய் மல்லையா விடுத்த கோரிக்கை என்ன தெரியுமா?

Report
1426Shares

வங்கிகளிடம் பெற்ற கடன்களை முழுவதும் திருப்பிச் செலுத்த விரும்புவதாகத் தொழிலதிபர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவில் முன்னணி தொழில் அதிபராக இருந்தவர் மல்லையா.கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்காக வங்கிகளில் விஜய் மல்லையா பெற்ற கடன், வட்டியும் முதலுமாக 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வாராக்கடனாக நிலுவையில் உள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்தாத விஜய் மல்லையா லண்டனில் வாழ்ந்து வருகிறார். டுவிட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், தான் வங்கிகளிடம் பெற்ற கடன் முழுவதையும் திருப்பிச் செலுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கடனைத் திரும்ப பெற வங்கிகளும், எனது சொத்துகளை விடுவிக்க அமலாக்கத்துறையும் விரும்பவில்லை அதனால் நிதியமைச்சர் தலையிட்டு இதற்குத் தீர்வு காணவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அதன் பின் கொரோனா பீதியில் வாடும் இந்தியாவில் தனது கடன் தொகையைக் கொண்டு நிவாரண உதவிகளை மேற்கொள்ளலாம் எனவும், நிதியமைச்சர் இதுகுறித்து பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு அறிவிப்பால் தனது அனைத்து நிறுவனங்களும் முடங்கிவிட்டதாகவும் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விரைவில் மீளவேண்டும் எனவும், பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனவும் விஜய் மல்லையா தனது ட்விட்டர் பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

loading...