கொரோனாவினால் மருத்துவமனையில் ஒட்டுமொத்த குடும்பம்... நள்ளிரவில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

Report
574Shares

ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பாதிக்கப்பட்ட நபருடன் அவரது குடும்பத்தினர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் நள்ளிரவில் அவர்களது வீட்டில் திருடர்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டம் ஹிஜின் என்ற நகரின் சதர்கோட் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த நபரது குடும்பத்தினருக்கும் வைரஸ் பரவியிருக்கலாம் என அச்சம் எழுந்ததால் அவர்களும் தனிமைபடுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்தினருடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதையறிந்த திருடர்கள் நேற்று நள்ளிரவு அவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்து, பணம் மற்றும் நகைகளைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

தற்போது பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், இம்மாதிரியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

loading...