குழந்தைகளை விட்டு காதலனுடன் ஓடிய இளம்பெண்... 8 வருடங்களுக்கு பின்பு ஊருக்கு வந்தவருக்கு நேர்ந்த பரிதாபம்

Report
1288Shares

குழந்தைகளை தவிக்கவிட்டு கள்ளக்காதலருடன் சென்ற பெண் 8 ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பியபோது தம்பியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிந்துபட்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி(40) இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

செல்விக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து இருவரும் ஊரைவிட்டு திருப்பூரில் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இருவரும் சொந்த ஊரான மதுரைக்கு திரும்பியுள்ளனர். நேற்று அதிகாலையில் முருகன் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர் முருகன், செல்வி இருவரையும் சரமாரியாக அரிவாளால் தாக்கிவிட்டு ஓடிவிட்டனர்.

இதில் பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், செல்வி உயிரிழந்த நிலையில், முருகன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தியதில் செல்வியின் சித்தி மகனான அருண் தன்னுடைய உறவினர்கள் சிலருடன் சேர்ந்து செல்வியை கொலை செய்தது தெரிய வந்துள்ளது.

இதையடுத்து அருணை கைது செய்த பொலிசார் மேலும் 2 பேரை தேடி வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கு பின் ஊர் திரும்பிய அக்காவை தம்பி வெட்டிக்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

loading...