வேலை முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய பொலிசார்... படுக்கையறையில் தற்கொலை!

Report
2891Shares

இரவு பணி முடிந்து வீட்டிற்குச் சென்ற பொலிஸ் ஒருவர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா(38). இவரது மனைவி சர்மிளா மற்றும் 2 குழந்தைகளுடன் வயர்லெஸ் சாலை, அண்ணாநகரில் வசித்து வருகின்றார்.

திருவெறும்பூர் காவல்நிலையத்தில் பொலிசாக வேலை பார்த்து வந்த இவர், நேற்றிரவு இரவு வேலையை முடித்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளார். பின்பு நள்ளிரவு 1 மணியளவில் தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஷேக் அப்துல்லா தூக்கில் தொங்கியதால் அலறி துடித்தனர் குடும்பத்தினர்.

தகவலறிந்து விமான நிலைய பொலிஸார் விரைந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

ஷேக் அப்துல்லா எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று உறுதியாக தெரியாத நிலையில், குடும்ப பிரச்சினை காரணமாக இருக்கலாம் என்று பொலிசார் முதல் கட்டமாக கூறியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

loading...