ஊரடங்கு உத்தரவு!... நண்பனை நம்பி சென்ற 16 வயது சிறுமியை சீரழித்த 9 பேர்

Report
1564Shares

இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டிருப்பதை பயன்படுத்தி 16 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கொரோனாவால் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் கடுமையான கட்டுப்பாடுகளும் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதனை பயன்படுத்தி 16 வயது சிறுமியை 9 பேர் சேர்ந்து சீரழித்துள்ளனர்.

கடந்த 24-ஆம் தேதி, ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சிறுமி ஊரடங்கு காரணமாக வீட்டிற்கு செல்ல போக்குவரத்து இல்லாமல் தவித்துள்ளார்.

அப்போது அவரது நண்பரின் உதவியை நாடியதாக தெரிகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட சிறுமியின் நண்பர், சாலை வழியாக சென்றால் பொலிசார் கெடுபிடி இருக்கும் எனக்கூறி காட்டுப்பகுதி வழியாக சென்றுள்ளார்.

அப்பகுதியின் அவனின் 8 நண்பர்கள் இருந்துள்ளனர், சிறுமி தனியாக இருந்ததால் அதனை பயன்படுத்தி 9 பேரும் சீரழித்துள்ளனர்.

இதனையடுத்து சிறுமியை மீட்ட பொலிசார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர், அத்துடன் குற்றவாளிகளை பிடிக்க விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

loading...