எலியை விரட்டி சென்ற விஜய்க்கு நேர்ந்த துயரம்!.. நெஞ்சில் குத்திய சுழிக்கி

Report
1231Shares

தமிழகத்தில் எலியை பிடிக்க விரட்டி சென்ற இளைஞருக்கு நெஞ்சில் சுழிக்கி குத்த மருத்துவர்கள் போராடி மீட்ட சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த உஞ்சனை கிராமத்தை சேர்ந்தவர் விஜய்(வயது 20).

இவரது வீட்டை சுற்றி ஏராளமான விவசாய நிலங்கள் இருப்பதால் எலித்தொல்லை இருந்துள்ளது, இதனால் அடிக்கடி எலியை விரட்டி வந்துள்ளனர்.

நேற்று இரவு வழக்கம் போல் 5 எலிகள் சேர்ந்து கொண்டு பள்ளம் தோண்ட ஆரம்பித்தது.

உடனே எலியை தேடி விரட்டி சென்ற போது, தவறுதலாக கீழே விழ சுழிக்கி நெஞ்சில் பாய்ந்துள்ளது.

இதனால் வலியால் துடிதுடித்தவரை தூக்கிக் கொண்டு குடும்பத்தினர் காரைக்குடி மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நீண்ட நேர அறுவைசிகிச்சைக்கு பின்னர் விஜயை மருத்துவர்கள் மீட்டுள்ளனர், தற்போது விஜய் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.