நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்

Report
1206Shares

இந்தியாவில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஆக உயர்ந்துள்ளது. அதில் 84 பேர் குணமடைந்துள்ள நிலையில் 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ் சோதனைக் கருவி புனேவைச் சேர்ந்த மைலாப் டிஸ்கவரி சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது.

மேலும், இந்தக் கருவியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டவர்களில் மினால் தாகேவ் போஸ்லே என்ற பெண்ணும் ஒருவர். இவர், நிறைமாத கர்ப்பத்துடன் இரவு பகல் பாராது உழைத்து, வெறும் 6 வாரங்களில் இக்கருவியை உருவாக்கியுள்ளார்.

கொரோனாவை கண்டறிய 3 அல்லது 4 மாதங்கள் என்று சொல்லப்பட்ட நிலையில், இவ்வளவு சீக்கிரம் உருவாக்கியதுடன், பிரசவத்திற்காக மாலை மகப்பேறு மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னர் சோதனைக் கருவியை National Institute of Virology (NIV)-க்கு மதிப்பீடு செய்வதற்காக மார்ச் 18-ம் தேதி அனுப்பிவிட்டு சென்றுள்ளார்.

இந்த விநியோகம் முடிந்த அடுத்தநாள் தனது மகளை பெற்றெடுத்துள்ளார் இந்த பெண் விஞ்ஞானி.

இவர்கள் கண்டுப்பிடித்த கொரோனா சோதனைக் கருவியின் மூலம் இரண்டை மணிநேரத்தில் கொரோனா இருக்கிறதா, இல்லையா என்று கண்டறிந்து கொரோனா பரவரை தடுக்க முடியும்.

இதுகுறித்து மினால் கூறுகையில், கொரோனா அவசரநிலையில் நாம் இருக்கும்போது, அந்த சவாலை ஏற்று இந்த கருவியை கண்டுப்பிடித்தோம். தேசத்திற்கான எனது அர்ப்பணிப்பு என்று தெரிவித்துள்ளார்.

loading...