நடிகர் கமல்ஹாசன் வீட்டில் ஒட்டப்பட்ட கொரோனா ஸ்டிக்கர்! அதிகாரிகள் விளக்கம்

Report
322Shares

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் யுத்தத்தை விட பயங்கர அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றது.

கொரோனாவினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது.எனினும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகர் கமல் வீட்டிலேயே அவரை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் நாடு திரும்பியவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் வீடுகளில் எச்சரிக்கை ஸ்டிக்கர்களும் ஒப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசன் வீட்டிலும் கொரோனா ஸ்டிக்கர் ஓட்டப்பட்டிருந்தது.

மாநகராட்சியின் சார்பில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில், கொரோனாவில் இருந்து எங்களையையும் சென்னையையும் காக்க தனிமைப்படுத்திக்கொண்டோம் என்று எழுதப்பட்டதுடன் கமல்ஹாசனின் பெயர் மற்றும் முகவரி இடம்பெற்றிருந்தது.

எனினும், கமல் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த ஸ்டிக்கர் அகற்றப்பட்டது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

பாஸ்போர்ட் அடிப்படையில் வந்த தகவலை அடுத்து கமலஹாசனின் கட்சி அலுவலகம் தனிமைப்படுத்தப் பட்டதாக நோட்டீஸ் ஓடியதாகவும், இதையடுத்து இந்த அலுவலகத்தில் யாரும் இல்லை என தகவல் வந்ததையடுத்து நோட்டீசை அப்புறம் படுத்தியதாகவும் விளக்கம் அளித்தனர்.

இதேவேளை, இதற்கு முன்னதாக அவரின் மகளான நடிகை ஸ்ருதி வெளிநாட்டில் இருந்து வந்ததும் அவரை தனிமை படுத்தி கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

loading...