கொரோனாவால் வீட்டின் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் 15 குடும்பம்!

Report
1086Shares

கோவையில் வீட்டு உரிமையாளர் ஒருவர் தன்னுடைய வீடுகளில் வசிக்கும் குடும்பத்திடம் வீட்டு வாடகை வேண்டாம் என்று கூறி, உதவிசெய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை உக்கடம், லால்பேட்டையில் மீன் கடை நடத்திவருபவர் காதர். இவர் தனக்குச் சொந்தமான 15 வீடுகளை கூலித்தொழிலாளிகளுக்கு வாடகைக்கு விட்டுள்ளார்.

தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பினால் 144 தடை போடப்பட்டுள்ளதால், மக்களின் இயல்புநிலை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தானே முன்வந்து, அந்த வீடுகளில் வசிப்பவர்களிடம் இந்த மாதம் வாடகை வேண்டாம்.... நீங்களே கஷ்டப்படுகின்றீர்கள் என்று பெருந்தன்மையாக கூறியுள்ளார்.

கொரோனா வைரசால், மறைமுகமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவி இது என்கிறார் காதர். இதுபற்றி அவர் கூறுகையில், கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இல்லை. எனவே, சாப்பாடு, மருத்துவ செலவு போன்றவற்றிற்கு செலவிடத்தான், அவர்களிடம் உள்ள பணம் போதுமானதாக இருக்கிறது. எனவே அவர்களிடம் இந்த மாத வாடகையை தர வேண்டாம் என்று கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

loading...