பணிக்கு செல்லும் காவலரை.. போகாதீங்க அப்பா என கதறும் குழந்தை.. பார்ப்பவர்களை உருக வைத்த காணொளி!

Report
431Shares

உலகம் முழுவதும் உயிர் பலியை ஏற்படுத்திவரும் கொரோனா நோயை சமாளிக்க, இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த வேளைகளில் மூடப்பட்டாத கதவுகளாய் இருந்து வருபவர்கள் காவல்துறையினரே. மக்களுக்கான விழிப்புணர்வுகளையும் அவர்கள் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. அதில் தன் குழந்தையை எவ்வளவோ சமாதானம் செய்துவிட்டு, வீட்டை விட்டு பணிக்கு செல்ல கிளம்பிக் கொண்டிருந்த அந்த காவலரிடம், அவரது குழந்தை அழுதுகொண்டே கதறிப் பேசும் இந்த வீடியோவை மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதோடு, அந்த ட்விட்டரில், “ஆபத்தை உணர்ந்தும் காவல் துறையினர் பணிக்குச் செல்வதற்கு நன்றி. காவல் துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

18267 total views
loading...