கொரோனா வைரஸால் உயிரிழந்தால் இப்படி தான் அடக்கம் செய்ய வேண்டும்: அரசு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report
1218Shares

கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் சடலத்தை எப்படி அடக்கம் செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு சில நெறிமுறைகளை கூறி உள்ளது.

மத்திய அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளை பின்பற்றினால் இந்த கொரோனா வைரஸ் பரவுதலில் இருந்து தடுக்க முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 16ம் திகதி டெல்லியில் கொரோனாவினால் பலியான பெண்ணின் உடலை தகனம் செய்வதில் சில மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது.

உடலை தகனம் செய்யும் ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் என்ன செய்வது என்று புரியாமல் திகைத்துப் போய் நின்றார்கள்.

உடலை தகனம் செய்தால் தங்களையும் வைரஸ் தாக்கிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்கள்.

இந்நிலையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் ரன்தீப் குலோரியா கொரோனா சுவாச குழாய் வழியாக பாதிப்பதால் இறந்தவரின் உடல் வழியாக பரவாது, இருமல் வழி மட்டும் தான் பரவும் என்று கூறியுள்ளார்.

உடலை தகனம் செய்யும் போது எந்த வகையிலும் உடலை தொட்டு செய்யும் சடங்குகளை செய்ய வேண்டாம்.

மத முறைப்படி சடலத்தை தொடாமல் மத வேதங்களை படித்தல், புனித நீரை தெளித்தல் போன்றவை மட்டும் செய்தால் போதும்.

சடலத்தை தொடுவது அல்லது சடலத்தை குளிப்பாட்டுவது, சடலத்தை முத்தமிடுவது, கட்டிபிடிப்பது போன்றவற்றிற்கு அனுமதி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அனைவரும் உடலை தகனம் செய்த பின்னர் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும்.

அதே போல் உடலை எரித்த பின்னர் அந்த சாம்பல் எடுத்துக் கொள்ள அனுமதி உண்டு. ஏனெனில் சாம்பலில் எந்தவிதமான வைரஸ்களும் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.

எந்த ஒரு பெரிய கூட்டங்களும் சேரக்கூடாது. ஏனெனில் தொற்று நோய் வருவதற்கான சூழ்நிலை அது ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதனை தவிர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

42106 total views
loading...