ஊரடங்கை மீறி மோசமாக நடந்து கொண்ட பெண்! கையை கடித்து குதறி பொலிஸார் மீது ரத்தத்தை பூசிய காட்சி

Report
2187Shares

கொரோனாவின் வீரியத்தை உணராத இந்திய மக்கள் நாடு முழுவதும் சாலைகளில் சர்வசாதாரணமாக நடமாடி வருகின்றனர்.

பேலிகுஞ்ஜேவிலிருந்து சால்ட் லேக் பகுதிக்கு நேற்யை தினம் பெண் ஒருவர் தனது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார்.

அவரை போலீஸார் கைகாட்டி நிறுத்தி எங்கே போகிறீர் என விசாரித்துள்ளனர். அதற்கு மருந்து வாங்க செல்வதாக தெரிவித்தனர். டாக்டர் எழுதி கொடுத்த மருந்து சீட்டை கொடுங்கள் என கேட்ட போது அதை அவர்கள் காட்டவில்லை.

இதனால் அவர்களை போலீஸார் அனுமதிக்கவில்லை. உடனே காரை விட்டு இறங்கிய பெண் அந்த போலீஸ்காரரை திட்டி தீர்த்துள்ளார்.

பின்னர் தனது பழைய காயத்தையும் கடித்து ரத்தம் வரவழைத்து அந்த ரத்தத்தை வெள்ளை சீருடை போட்டிருந்த அந்த போலீஸ்காரர் மீது பூசினார்.

என்னை பிடித்து தள்ளியதாகவும், என்னை காயப்படுத்தியதாகவும் பொய்யான புகாரை உங்கள் மீது கொடுப்பேன் என போலீஸையே மிரட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.