நர்ஸிடம் டீ கேட்ட கொரோனா நோயாளி.. தாமதமாக வந்ததால் அவர் செய்த பதறவைக்கும் காரியம்!

Report
558Shares

டீ கொண்டுவர தாமதமானதால் பணியில் இருந்த செவிலியரை கொரோனா நோயாளி ஒருவர் தாக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மஸ்கட்டில் இருந்து கேரளா திரும்பிய நபர் ஒருவருக்கு, கொரோனா பாதிப்பு இருக்கலாம் என்ற பெயரில், கேரளா மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

இந்நிலையில், தனக்கு டீ வேண்டும் என பணியில் இருந்த நர்ஸ் ஒருவரிடம் கேட்டுள்ளார் அந்த நோயாளி, தனது பணிகளை முடித்துவிட்டு நர்ஸ் லேட்டாக அந்த நோயாளிக்கு டீ கொடுத்ததாக தெரிகிறது.

ஏற்கனவே தனிமையின் விரக்தியில் இருந்த அந்த நோயாளி, தனக்கு தாமதமாக டீ கொண்டுவந்த நர்ஸை தாக்கியுள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த நர்ஸ் அளித்தபுகாரின் பேரில் தனிமைப்படுத்தப்பட்டவர் மீது போலீஸார் தற்போது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.