கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்து கொள்ள இந்திய அரசின் வாட்ஸ் அப் சேவை.. இணைவது எப்படி?

Report
74Shares

கொரோனா வைரஸ் குறித்த துல்லியமான தகவல்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், கொரோனாவை கட்டுப்படுத்துவது எப்படி போன்ற தகவல்களை பெற இந்திய அரசு வாட்ஸ்-ஆப் சேவை ஒன்றை துவங்கியுள்ளது.

உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாட்டு அரசுகளும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. மக்கள் மத்தியில் சரியான தகவல்களை கொடுத்து அவர்களது அச்சத்தை போக்கவும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்த நிலையில், தற்போது இந்திய அரசு வாட்ஸ்-ஆப் சேவை ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. கீழே குறிப்பிட்டுள்ள லிங் அல்லது அந்த மொபைல் எண்ணிற்கு Hi என டைப் செய்து அனுப்பினால் அடுத்தடுத்த தகவல்கள் ஒருவரின் வாட்ஸ்-ஆப்பிற்கு வருகிறது.

மேலும், இந்த வாட்ஸ்-ஆப் நம்பர் மூலம் ஒருவர் கொரோனா வைரஸ் என்றால் என்ன, அதன் அறிகுறிகள், எப்படியெல்லாம் பரவும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது எப்படி, மருத்துவர்களின் ஆலோசனைகள், கொரோனா குறித்த அச்சமிருந்தால் எப்படி உதவிகள் பெறுவது போன்ற தகவல்களை பெற முடியும்.