தனது வீட்டை மருத்துவமனையாக மாற்றிக்கொள்ளலாம்! நடிகர் கமல்ஹாசனின் அதிரடி முடிவு....

Report
427Shares

இந்திய மாநிலமான தமிழகத்தில் கொரோனாவின் கோரத்தாண்டவம் தீவிரமாக பரவி வருவதையடுத்து, தமிழகத்தில் நேற்றிலிருந்து 144 தடை உத்தரவினை அமல்படுத்தியுள்ளது.

தற்போது நாடு முழுவதும் ஏப்ரல் 14ம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா இருப்பதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில் அவர்களை அனுமதிக்க போதிய இடவசதி ஏற்படுத்துவதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன், தமது வீட்டை மருத்துவ மையமாக மாற்றிக் கொள்ளலாம் என அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது; 'இந்த நெருக்கடி நேரத்தில் எளியோருக்கு பணி செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கும் மருத்துவர்களை கொண்டு, என் வீடாக இருந்த கட்டிடத்தை, தற்காலிகமாக எளிய மக்களுக்கான மருத்துவ மய்யமாக்கி, மக்களுக்கு உதவ நினைக்கிறேன். அரசின் அனுமதி கிடைத்தால்,அதை செய்ய தயாராக காத்திருக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

14743 total views
loading...