இந்தியன் 2 படப்பிடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு சங்கர் அளித்த உதவித்தொகை... எவ்வளவு தெரியுமா?

Report
2335Shares

சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் நடித்து வரும் இந்தியன் 2 படப்பிடிப்பில் கடந்த 19ம் திகதி இரவு ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை அருகே உள்ள பூந்தமல்லியில் நடைபெற்று வருகிறது. இதற்காக நசரத்பேட்டையிலுள்ள இ வி பி பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்புகள் நடைபெற்று வந்தது. இந்த படப்பிடிப்பின்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் ராட்சத கிரேன் சரிந்து, கிரேன் மானிட்டர் என்னும் படப்பிடிப்பு காட்சியினை அவதானிக்கும் கூடாரத்தின் மீது விழுந்துள்ளது.

இந்த விபத்தில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, உதவி கலை இயக்குநர் இயக்குநர் தயாரிப்பு உதவியாளர் மது என மூன்று பேர் பலியாகியுள்ளனர். 8 பேர் படுகாயமடைந்த நிலையில், கமல் மற்றும் இயக்குனர் சங்கர் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் நேற்று சங்கர், இந்தியன் 2 விபத்து நடந்தது குறித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியன் 2 படப்பிடிப்பில் இறந்து போன கிருஷ்ணா, மது, சந்திரன் ஆகியோர் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாயை உதவியாக அளித்துள்ளார். ஏற்கெனவே நடிகர் கமல் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு 1 கோடியை அளித்திருந்தார் என்பதும் குறிபிடத்தக்கது.

63543 total views
loading...