20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன்!... நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்

Report
781Shares

தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணை காதலித்த 17 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் குலமங்கலம் ஏடி காலனியை சேர்ந்தவர் தெய்வேந்திரன். கூலிவேலை செய்யும் இவருக்கு மூன்று மகன்கள் உள்ள நிலையில் கிரிக்கெட் மீதுள்ள ஆர்வத்தால் தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் என்று பெயரிட்டுள்ளார்.

17 வயதான இவர் ஆலங்குளத்தில் டூவீலர் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார்.

சேவாக் அதே அப்பகுதியைச் சேர்ந்த 20 வயது பெண்ணை தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.

இதையறிந்த அந்த பெண்ணும் பெண் வீட்டாரும் கண்டித்துள்ளனர். ஆனால் எனக்கு வயது ஒரு பொருட்டல்ல என்று காதலில் சேவாக் உறுதியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு நேற்று முன்தினம் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது, இதனால் மனமுடைந்த சேவாக், அப்பெண்ணை சந்தித்து விட்டு திரும்பியுள்ளார்.

அத்துடன் நள்ளிரவு 12 மணியளவில் பைக்கை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கிளம்பிய சேவாக், பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சேவாக்கை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

80 சதவீத தீக்காயத்துடன் அனுமதிக்கப்பட்ட சேவாக் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதற்கு முன்னதால், ஒருதலை காதலால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக சேவாக் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்தமை குறிப்பிடத்தக்கது.

26203 total views
loading...