கண்வலியால் துடித்த நபருக்கு புற்றுநோய் என்ற மருத்துவர்கள்... அறுவைசிகிச்சையில் கண்ட பேரதிர்ச்சி

Report
784Shares

கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 80 நாட்களுக்கு மேலாக கடுமையான கண் வலியால் துடித்துள்ளார். அதற்காக கண் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கண்ணில் புற்றுநோய் இருப்பதாக கூறியுள்ளனர்.

அவர் அதே போல் பல மருத்துவமனை ஏறி இறங்கியும் அனைவரும் கண்ணில் புற்றுநோய் உள்ளதாகவே கூறியுள்ளனர். மேலும் ஒரு சில மருத்துவர்கள் கண்ணில் இருக்கும் இந்த புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்தாலும் உயிர் பிழைக்க முடியாது என்று கூறியுள்ளனர். ஒரு சிலர் அறுவை சிகிச்சை செய்தால் கண் வலி குறைந்து விடும் என்று கூறியுள்ளனர்.

கடைசியாக அவர் ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சையில் ஈடுப்பட்ட போது அவரது கண்ணிலிருந்து 3.5 செ.மீ அளவில் மரத்துண்டை நீக்கியுள்ளனர்.

அந்த நபர் ஒரு நாள் மரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார் அப்போது அவருக்கும் தெரியாமல் மரத்துண்டு அவரது கண்ணை தாக்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. தற்போது அவர் கண் வலி குறைந்து நலமுடன் இருக்கிறாராம்.

28581 total views
loading...