டிக் டாக்கில் நண்பருடன் கலக்கிய இளைஞர்... தூங்கி எழுந்ததும் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்

Report
197Shares

புதுக்கோட்டை மாவட்டம், கிருஷ்ணாஜிப்பட்டினத்தைச் சேர்ந்தவர்கள் ரியாஸ், பகுர்லா இருவரும் நண்பர்கள். இவர்கள் டிக் டாக்கில் பதிவிடும் வீடியோக்கள் இவர்களது நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதனால் நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கலாய்த்து வீடியோ பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், பகுர்லா இறந்துவிட்டதாக அவரது போட்டோவில் கண்ணீர் அஞ்சலி, இன்று ஒரு விபத்தில் இறந்துவிட்டார் என்று எழுதி, எள்ளுவய பூக்கலியே என்ற உருக்கமான பின்னணி பாடலுடன் ரியாஸ் டிக் டாக் வீடியோ ஒன்றை விளையாட்டாக பதிவிட்டுள்ளார்.

இவர்கள் டிக் டாக்கில் பிரபலம் என்பதால் பலரும் இதுகுறித்து சோகத்துடன் விசாரித்தனர். ஆனால் வீடியோவை பதிவிட்ட ரியாஸ் இரவு தூங்க சென்றுவிட்டார். அதே சமயம் பகுர்லாவுக்கு இதுகுறித்து விவரம் தெரியவில்லை.

இந்த வீடியோ தீ போல பரவ பகுர்லாவின் வீட்டிற்கு அவரின் உறவினர்கள் துக்கம் விசாரிக்கப் படையெடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அப்போது பகுர்லா உயிருடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து விசாரிக்க, அப்போது தான் அவருக்கு ரியாஸ் செய்த வேலை தெரியவந்துள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள பகுர்லா, நான் இறந்துவிட்டதாக அவர் பதிவிட்டிருக்கிறார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். அவரை கைது செய்து அவரின் ஐடியை பிளாக் செய்ய வேண்டும் என்று ஆதங்கமாகக் கூறியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

8334 total views
loading...