மட்டன் பீஸை திருடிய நாய்: துரத்தி சென்று பழிவாங்கிய கடைக்காரர்... கடைசியில் நிகழ்ந்த பரிதாபம்

Report
574Shares

மகாராஷ்டிராவில் கறிக்கடையில் இருந்து மட்டன் பீஸை தூக்கி சென்ற நாயை கறிக்கடைக்காரர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள சந்த்ரபூர் பகுதியில் கறிக்கடை ஒன்று உள்ளது. அந்த பக்கமாக சென்ற தெரு நாய் ஒன்று வெட்டி வைத்திருந்த ஆட்டுக்கறியிலிருந்து ஒரு துண்டை கவ்விக் கொண்டு ஓடியுள்ளது.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த கறிக்கடைக்காரர் நாயை துரத்தி சென்றிருக்கிறார். நாய் வேகமாக ஓடவே ஆத்திரமடைந்த கறிக்கடைக்காரர் நாய் மீது கத்தியை தூக்கி வீசியிருக்கிறார். கத்தி குத்தியதால் காயமடைந்த நாய் கறியை போட்டுவிட்டு அலறியபடியே ஓடியிருக்கிறது.

இந்த சம்பவத்தை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்ற, விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த கறிக்கடைக்காரர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

20129 total views
loading...