சவப்பெட்டியில் மகள்!... தந்தையை எட்டி உதைத்த பொலிஸ்- பதறவைத்த வீடியோ காட்சிகள்

Report
1640Shares

தெலுங்கானாவில் மகள் இறந்த துக்கத்துடன் இருந்த தந்தையை பொலிசார் எட்டி உதைக்கும் காட்சிகள் வெளியாகி பார்ப்போரின் கண்களை குளமாக்குகின்றன.

தெலுங்கானாவின் சங்க ரெட்டி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், சலவை செய்யும் அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மாணவியின் மரணத்தில் மர்மம் நிலவுதால் பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கல்லூரி நிர்வாகம் மீதும் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், வீடியொவொன்று வைரலானது.

அதில், ஒரு குழுவாக உள்ள பொலிஸ் அதிகாரிகள் இரும்பு சவப்பெட்டியில் ஒரு இளம் பெண்ணின் உடலை அதி வேகமாக சாலையில் தள்ளிச்செல்கின்றனர்.

அவ்வாறு அவர்கள் அந்த பெட்டியைத் தள்ளிச்செல்லும்போதும் அப்பெண்ணின் தந்தை தடுக்க முயல்கிறார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்த அவரை அருகிலிருந்த காவலர் ஒருவர் தனது பூட்ஸ் கால்களால் எட்டி உதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் குறித்த அதிகாரி இடைநீக்கம் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக உயரதிகாரி பேட்டியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

61798 total views
loading...