காதலியின் இறுதிச்சடங்குக்கு வந்த காதலன்!... படுகொலை செய்யப்பட்ட பரிதாபம்

Report
574Shares

தமிழகத்தில் காதலியின் இறுதிச்சடங்கை பார்க்க வந்த காதலன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பத்தைச் சேர்ந்தவர் ராகவன். இவர் அதே பகுதியைச் சேர்ந்த அருணா என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.

ராகவன் மீதும் அவருடைய அண்ணன் மீதும் திருட்டு வழக்குகள் இருக்கும் நிலையில், ராகவனுடன் இருக்கும் தொடர்பை நிறுத்து கொள்ளும்படி அருணாவை பெற்றோர் கண்டித்துள்ளனர்.

அதோடு ராகவனை அருணாவின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.

இதனால் ராகவனின் தாய் தன் மகனின் உயிருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று அஞ்சி, ஹைதராபாத்திற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார்.

இருப்பினும் ஹைதராபத்தில் இருந்த படி ராகவன், காதலியான அருணாவிடம் பேசிவந்துள்ளார். இந்த விவகாரம் அருணாவின் பெற்றோருக்கு தெரிய வர, செல்போனை பிடுங்கி வைத்ததுடன், வீட்டு சிறையில் வைத்துள்ளனர்.

அதன் பின் அவருக்கு மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துள்ளனர், இது ஹைதராபாத்தில் இருக்கும் ராகவனுக்கு எப்படியோ தெரிய வர அவர் தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது.

இதை அறிந்த அருணா கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி அருணாவை பெண் பார்க்க மாப்பிளை வீட்டார் வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனால் வாழ்ந்தால் ராகவனுடன் தான் வாழ்வேன் என்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை அவரின் தோழி ஒருவர் வாட்ஸ் அப்பில் வைத்ததைக் கண்ட, ராகவன் அதிர்ச்சியடைந்துள்ளார்.

அவரும் அங்கு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதன் பின் அவரின் நண்பர்கள் அந்த பெண்ணின் இறுதிச்சடங்கிற்கு செல்லலாம் என்று அவரை சொந்த ஊருக்கு அழைத்து வந்துள்ளனர்.

அப்போது அவருடன் வந்த சஞ்சய் என்ற வாலிபர் அருணாவின் அண்ணனுக்கு தகவல் கூறியதால், சகோதரியின் தற்கொலைக்கு ராகவன்தான் காரணம் என்று ஆத்திரத்தில், அருணாவின் சகோதரன் மற்றும் தாய் மாமன் குட்டை ரமேஷ் ஆகிய இருவரும் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அங்கிருந்த அருணாவின் சகோதரர் மற்றும் மாமன் குட்டை ரமேஷ் ராகவனுடன் வாக்குவாத்தில் ஈடுபட்டதுடன், அவரை இரு சக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வருவதாக கூறிய மகன், வெகு நேரமாகியும் திரும்பாத காரணத்தினால் ராகவனின் தாய் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அப்போது தான் குறித்த பகுதியில் மனித உடல் ஒன்று எரிவது போல் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அங்கு விரைந்து சென்ற பொலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் விசாரணையில் அது ராகவனின் உடல் என்றும், அருணாவின் சகோதரர் மற்றும் அவரது தாய் மாமன் இருவரும் தான் ராகவனை வெட்டிக்கொலை செய்துவிட்டு உடலை எரித்த சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து கொலை வழக்கை பதிவு செய்த பொலிசார் அருணாவின் சகோதரர், தாய் மாமன் குட்டை ரமேஷ் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர்.

18387 total views
loading...