பிரபல நடிகைக்கு தொடர்ச்சியாக ஆபாச அழைப்புகள்!... இளைஞர் செய்த செயலால் கதறும் நடிகை

Report
206Shares

தனக்கு பல்வேறு எண்களில் இருந்து ஆபாச அழைப்புகள் வருதாக பிரபல நடிகையான காயத்ரி ராவ் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அஞ்சலி படத்தில் நடித்திருப்பவர் காயத்ரி ராவ், தேனாம்பேட்டை சீதாம்மாள் காலனியில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பொலிஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார், அதில், பல்வேறு அழைப்புகளில் இருந்து ஆபாச பேச்சுகள் வருவதாக தெரிவித்திருந்தார்.

எனவே இதுதொடர்பாக சக்திவேல், சுந்தரம் சந்திரபோஸ் மற்றும் மகேஸ்வரன் போன்றவர்களை அழைத்து விசாரணை நடத்தினர்.

அவர்களின், செல்போன் எண்களை வைத்து ஆய்வு செய்ததில், ஆபாச வீடியோக்களை பகிர்ந்து கொள்வதற்காக, அவர்கள் வைத்திருந்த வாட்ஸ்அப் குரூப்பில் நடிகை காயத்ரி ராவ் நம்பரை ஒருவர் பதிவிட்டு இருந்ததும், அதை வைத்து தொடர்பு கொண்டதும் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் பரமேஸ்வரன் என்பவர் நம்பரை பதிவு செய்தது தெரியவந்தது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9ம் திகதி ஒன்லைனில் பீட்சா ஆர்டர் செய்த நடிகைக்கு, பரமேஸ்வரன் டெலிவரி செய்துள்ளார்.

அதன்போது வரும் வழியில் பரமேஸ்வரனை நடிகை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியுள்ளார், இதனால் இருவருக்கும் வாக்குவாதம் எழுந்துள்ளது.

இதனால் பழிவாங்கும் நோக்கத்தில் இதனை செய்ததாக பரமேஸ்வரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த நிறுவனம் பரமேஸ்வரனை பணிநீக்கம் செய்துள்ளது.

6458 total views
loading...