ரயிலில் ஏற முயன்று விழுந்த பயணி.. இழுத்துக்கொண்டே சென்ற ரயில்.. நொடியில் மீட்ட காவலர்.. வைரல் காணொளி!

Report
356Shares

ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்றபோது, நழுவி கீழே விழுந்தவரை சரியான நேரத்தில் ஆர்எஃபி பொலீசார் மீட்ட வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கரக்பூா் அருகே பாா்பெட்டியாவைச் சோ்ந்தவா் சுஜோய் கோஷ் (43). இவா் கடந்த நாட்களுக்கு முன் இரவு 10 மணியளவில் கரக்பூா்- அசன்ஸோல் பயணிகள் ரயிலில் ஏற முயன்றபோது, நழுவி விழுந்துள்ளார்.

அப்போது, ரயில் படிக்கட்டுகள் அவரது தலையிலும், கால்களிலும் தாக்கிக் கொண்டே சென்றன. உடனே இதைக்கண்ட ஆா்பிஎஃப் காவலா் தா்மேந்திர யாதவ் அங்கு வேகமாக ஓடிவந்து, சுஜோய் கோஷின் கால்களை பற்றி வெளியே இழுத்து மீட்டாா்.

இது பிளாட்பாரத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவிலும் இந்த காட்சி பதிவானது. இச்சம்பவத்திற்குப் பின் ரயில் நிறுத்தப்பட்டதையடுத்து, பயணிகள் விரைந்து வந்து , காவலருடன் சேர்ந்து சுஜோய் கோஷை மீட்டு மிதுனபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனர்.

தற்போது அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்த வீடியோ தற்போது இணையத்திலும் வெளியாகி உள்ளது.

10907 total views
loading...