மகள் குளிக்கும் போது கேட்ட அலறல் சத்தம்.. ஓடிய மர்ம நபர்.. விரட்டி பிடித்த தாய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!

Report
1676Shares

சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் வினோத். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். வினோத்தின் வீட்டு அருகில் இருக்கும் இளம்பெண் ஒருவரை குளிக்கும் போது வீடியோ எடுத்துள்ளார்.

அப்போது, அதைக்கண்ட அவரின் தயார் கையும் களவுமாக பிடித்து, பொலிசில் புகார் அளித்துள்ளார். அதில், நான் எனது கணவர் மற்றும் இரண்டு மகள்களுடன் அயனாவரத்தில் வசித்துவருகிறேன்.

நேற்று எனது முதல் மகள் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்தபோது பாத்ரூமுக்கு வெளியே ஏதோ சத்தம் கேட்டதாகவும், அங்கு சென்றுபார்த்தபோது பக்கத்து வீட்டில் தங்கியிருக்கும் வினோத் என்ற இளைஞர் ஓட்டை வழியாக தனது மகள் குளிப்பதை வீடியோ எடுத்து கொண்டிருந்ததாகவும் கூறியுள்ளார்.

உடனே வினோத்திடம் சண்டையிட்டு அவரிடம் இருந்த செல்போனை தான் பறித்துவைத்திருப்பதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார். இதனை அடுத்து வினோத்தின் செல்போனை சோதித்த போலீசார் அதில் வீடியோ இருப்பதை உறுதி செய்தனர்.

இதையடுத்து வினோத் மீது வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

70559 total views
loading...