19 வயது பெண்ணை திருமணம் செய்த 16 வயது சிறுவன்... பின்பு நடந்தது என்ன தெரியுமா?

Report
627Shares

பெங்களூரில் 19 வயது பெண்ணை 16 வயது சிறுவன் காதலித்து திருமணம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யும் வேலை செய்து வந்த 16 வயது சிறுவனுக்கு, அதே பகுதியில் வீட்டு வேலை செய்யும் 19 வயது பெண் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.

இவர்கள் காதலித்த வேளையில் சிறுவனை நம்பி குறித்த பெண் வீட்டை விட்டு வெளியேறினார். பின்பு சிறுவனின் வீட்டில் சமாதானமாக சென்று இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

மகள் வீட்டைவிட்டுச் சென்றதால் துக்கத்தில் இருந்து பெற்றோர்கள் நேபாள் சென்றுள்ளனர். பின்பு குறித்த சிறுவனின் வயதை நம்பமுடியாத சிலர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

பொலிசாரின் விசாரணையில் குறித்த சிறுவனுக்கு 16 வயது என்பது உறுதியான நிலையில், மணப்பெண், சிறுவன் மற்றும் அவனது பெற்றோர் என அனைவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

28371 total views
loading...