ஒன்றரை வயது குழந்தையை கடலில் வீசிய தாய்... பின்னணி நிகழ்ந்த பாரிய சதித்திட்டம் அம்பலம்

Report
764Shares

கேரளாவில் தனது இரண்டாவது திருமணத்திற்கு ஒன்றரை வயது மகன் இடையூறாக இருந்ததால் பெற்ற தாயே, குழந்தையை கடலில் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் தையில் பகுதியில் வசித்து வரும் தம்பதி பிரணவ், சரண்யா(22). இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தையும் உள்ளது.

திருமணமான கொஞ்ச நாளில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து சரண்யா அவரது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன்பு கணவனுக்கு போன் செய்து, தனது தாய் வீட்டிற்கு அழைத்துள்ளார். இரவு நேரம் ஆகிவிட்டதால் தன்னுடன் தங்கிவிட்டு காலையில் செல்லுமாறு கூறியுள்ளதையடுத்து பிரணவ்வும் அங்கேயே தங்கியுள்ளார்.

காலையில் சரண்யா குழந்தையை காணவில்லை என்று அலறவே, பிரணவ்வும் விழித்து குழந்தையை தேடி வந்துள்ளனர். பின்பு பொலிசில் புகார் அளித்ததில் சரண்யா பிரணவ் குழந்தையை கடத்திவிட்டதாகவும், பிரணவ் சரண்யா தான் குழந்தையை எதோ செய்துவிட்டார் என்று மாறி மாறி குற்றம் சாட்டியுள்ளனர். பின்பு இவர்களது வீட்டின் அருகில் கடற்கரையில் பாறை இடுக்கில் குழந்தை சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொலிசாருக்கு சந்தேகம் ஏற்பட பொலிசார் இறுதியாக சரண்யாவின் உடையை வேதியியல் பரிசோதனைக்கு உட்படுத்தியதில், அவரது உடையில் கடல் நீர் பட்டுள்ளது தெரியவந்துள்ளது. பின்பு பொலிசாரின் தீவிர விசாரணையில் சரண்யா தானே கொலை செய்ததாக ஒப்புக்கொண்டதுடன், கணவரை சிக்கவைக்க இவ்வாறு செய்ததாகவும் கூறியுள்ளார்.

பின்பு பொலிசார் அவரது போனை சோதனை செய்ததில், இளைஞர் ஒருவருடன் அடிக்கடி பேசியுள்ளது தெரியவந்ததையடுத்து சரண்யாவிடம் இதுகுறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது முகநூல் மூலம் அறிமுகமான நபரை திருமணம் செய்துகொள்வதற்கு குழந்தை தடையாக இருந்ததால் இவ்வாறு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

28222 total views
loading...