2 குழந்தைகளின் தாயை காதலித்த இளைஞன்!... பட்டப்பகலில் உயிருடன் எரித்துக் கொல்ல முயற்சி

Report
263Shares

கடலூரில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்த வாலிபர் உயிருடன் எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியை சேர்ந்தவர் ஜான் விக்டர். இவர் ராணுவத்தில் வேலைபார்த்து வருகிறார்.

இவரது மனைவி பிலோமினா(வயது 24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். பிலோமினா வடலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.

இதற்காக தினமும் நெய்வேலி டவுன் ஷிப்பில் இருந்து வடலூருக்கு பேருந்தில் சென்று வந்தார்.

இதில் பிலோமினாவுக்கும், பஸ் டிரைவர் சுந்தரமூர்த்திக்கும் பழக்கம் ஏற்பட்டது, தினமும் பேசிக் கொண்டே வந்ததால் பிலோமினாவை ஒருதலையாக காதலிக்க தொடங்கினார் சுந்தரமூர்த்தி.

இதுபற்றி பிலோமினாவிடம் தெரிவித்ததும் காதலை ஏற்க மறுத்ததுடன் பேசுவதையும் நிறுத்தவிட்டார்.

இதனால் கோபமடைந்த சுந்தரமூர்த்தி, பிலோமினாவை பழிவாங்க எண்ணினார், அதன்படி நேற்று காலை வழக்கம் போல் வடலூரில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது தன்னிடம் பேச சொல்லி பிலோமினாவை வற்புறுத்தியுள்ளார்.

அவர் மறுப்பு தெரிவித்ததும் கையில் இருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டார், வலியில் அலறி துடித்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததுடன் சுந்தரமூர்த்தி அடித்து துவைத்து பொலிசிடம் ஒப்படைத்தனர்.

லேசான தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட பிலோமினாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

8795 total views
loading...