நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து திருடன் செய்த செயல்: குவியும் பாராட்டுகள்

Report
378Shares

கேரளாவில் திருட வந்த நபர் ஒருவர் வீட்டின் சுவற்றில் மன்னிப்பு கோரி எழுதிச் சென்றுள்ள சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.

கேரளாவின் திருவாங்குளம் பகுதியில் இருக்கும் வீட்டின் பூட்டை உடைத்து நபர் ஒருவர் திருடச் சென்றுள்ளான்.

உள்ளே சென்றதும் அங்கிருக்கும் புகைப்படங்களை பார்த்த போது அது ராணுவ வீரருடைய வீடு என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து வீட்டிற்கு வெளியே இருக்கும் சுவற்றில், மன்னிப்பு வாசகம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளான்.

அதில், 'இது ராணுவ வீரரின் வீடு என தெரியாமல் திருட உள்ளே நுழைந்து விட்டேன். பைபிளின் ஏழாவது கட்டளையை மீறிவிட்டேன். ராணுவ அதிகாரி அவர்களே, என்னை மன்னித்து விடுங்கள்' என குறிப்பிட்டுள்ளான்.

தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

16382 total views
loading...