பள்ளி சீருடையில் மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்! அதிர்ந்துபோன பார்வையாளர்கள்.. கதறும் 90ஸ் கிட்ஸ்

Report
1020Shares

சமூக இணையத்தளங்களில் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு காட்சியான பள்ளி மாணவர் ஒருவன் மாணவிக்கு கழுத்தில் செயின் கட்டுவிடும் காட்சியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நெல்லை மாவட்டம் களக்காடு பகுதியில் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. ஒரு மாணவன், பள்ளிச் சீருடையில் உள்ள மாணவி கழுத்தில் தாலி கட்டுவது போல் நடித்து செயினை அணிவிக்கிறார்.

அந்த மாணவியும் வெட்கத்தில் தலை குனிந்தபடி செயினை தாலி போல் ஏற்றுக் கொள்கிறார். 22 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ பார்ப்பவர்களை அதிர வைக்கிறது. காட்சிகளின் பின்னணியில் சாமி படத்தில் வரும், இதுதானா, இதுதானா பாடலும் ஒலிக்கிறது.

மேலும், படிக்கும் மாணவர்கல் இதுபோன்ற ஒரு சீர்கேடான விஷயங்களை செய்வது, அனைவரையும் முகழ் சுழிக்கவே வைத்திருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், நவீன செல்போன்களின் தாக்கம் மாணவ-மாணவிகளை பாடாய்படுத்தி வருகிறது. 3 வயது முதல் சிறுவர், சிறுமிகள் செல்போனில் மூழ்கி விடுவதை காண முடிகிறது.

பெற்றோர் தங்களது குழந்தைகளை வளர்க்கும் போது அவர்கள் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் விதம், பள்ளி பருவத்தில் அவர்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வளர்க்க வேண்டும். விளையாட்டாக செய்யும் நிகழ்வுகள் கூட எதிர்காலத்தில் அவர்களது நல் வாழ்க்கைக்கு ஊறு விளைவித்து விடும் என்பதை மாணவிகளும் அவசியம் உணர வேண்டும். என்கிறார்கள்.

மேலும், இவ்விவகாரம் தொடர்பாக குழந்தைகள் பாதுகாப்பு அலகு விசாரணை நடத்தியது. வீடியோவில் இருக்கும் மாணவர் மற்றும் மாணவி அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களிடம் விசாரணை நடத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

33054 total views
loading...