நள்ளிரவில் அழுதுகொண்டே இருந்த குழந்தை.. ஆத்திரத்தில் கடலுக்கு தூக்கி சென்று தாய் செய்த கொடூரம்.. விசாரணையில் அம்பலம்!

Report
461Shares

ஓயாமல் அழுதுகொண்டே இருந்த குழந்தையை கடலின் பாறையின் மீது வீசி கொன்று விட்ட சாதரணமாக வந்து தூங்கிய கொடூர தாய் செய்த சம்பவம் பதற வைத்துள்ளது.

கேரள மாநிலம் உள்ள கண்ணூர் பகுதியை சேர்ந்த தம்பதிகள் சரண்யா, பிரனவ். இவர்களுக்கு ஒன்றரை வயதில் லியான் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று, நள்ளிரவில் தங்கள் குழந்தையை காணவில்லை என இருவரும் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, விசாரணையை நடத்திய காவல்துறையினர், தாய் சரண்யா மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனிடையில் குழந்தையின் சடலம் அவர்கள் வீட்டு அருகே உள்ள கடற்கரையில் கிடைத்துள்ளது.

மேலும், தாயிடம் நடத்திய தீவிர விசாரணையில், அவர் முன்னுக்கு பின்னாக பதிலை கூறியுள்ளார். அதன் பின்னர் வீட்டை சோதனை செய்ததில், கடல் மண் துகள்கள் அவரின் போர்வையின் மீது இருந்ததால், விசாரணை செய்ததில், குழந்தையை கொலை செய்துள்ளதை ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அவர் அளித்த வாக்குமூலத்தில், நள்ளிரவில் குழந்தையின் அழுகை சத்தம் தாங்க முடியவில்லை. தொடர்ந்து அழுதுகொண்டே இருந்தது. அவனை கடற்கரைக்கு அழைத்து சென்றேன். ஆனாலும் அவன் அழுகை நிறுத்ததால், ஆத்திரத்தில் கடற்கரை பாறையில் அடித்து, கடலில் தூக்கி வீசிவிட்டு, வீட்டுக்கு வந்து தூங்கிவிட்டேன் என்று பதிலை அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியிருக்கிறது.

19266 total views
loading...